திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த போதே திடீரென உயிரிழந்த பெண்

ஹொரணை  பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு நண்பர்களுடன் நடனமாடியுள்ளார். இதனை தொடர்ந்து யுவதி மேலும் இரு யுவதிகளுடன் அங்கிருந்து திடீரென வெளியேறி சுகயீனமடைந்த நிலையில் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது யுவதியை பரிசோதித்த அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.