Sri Lanka Tamil News Site

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

- Advertisement -

சென்னை அமைந்தகரை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(33வயது) கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த அம்மு(27வயது) என்ற இளம்பெண்ணுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில், ஏழுமலை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி அம்முவிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு அம்மு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் அம்முவின் கை, கால், முகம் என அனைத்து இடங்களிலும் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

அம்முவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த அம்முவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் , கள்ளக்காதலன் ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!