திருப்பதி லட்டில் குட்கா புகையிலை : திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள கோரிக்கை!

இந்தியாவில் தமிழ்நாடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாகப் பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா – கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பதி கோவிலுக்குச் சென்றவேளை, அங்கிருந்து வாங்கி வந்த லட்டு பிரசாதத்தை உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது, அதிலிருந்து குட்கா புகையிலை பொருட்கள் உதிருவதாகக் காணொளி எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டைத் திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.