திருக்கோணேஸ்வரர் கோவில் பகுதியில் கசிப்பு விற்பனை செய்த கடைக்கு பூட்டு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் கோவிலை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது திருகோணமலை நகரசபையினரால் முத்திரை குத்தப்பட்டு பூட்டப்பட்ட சம்பவத்தின் போது நகரசபை ஊழியர் ஒருவர் அடையாளந் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் திருகோணமலை – திருகோணேஸ்வர ஆலயத்தினை அண்மித்த கடை ஒன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்ததாக கருதப்பட்டு குறித்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் ஞாயிற்று கிழமை குறித்த கடைக்கு முத்திரை குத்தி பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாள தே.ஜெய விஷ்னு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இன்று  நகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து அதனை முத்திரையிட்டு மூடுவதற்கான நடவடிக்கைகளை மேட்கொண்ட போது அங்கு இனம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் இதன்போது தாக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் குறித்த காக்குதல் இடம்பெற்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறையினரும் அதனை தடுக்க மேற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்