திருக்கோணேஸ்வரர் ஆலய நிருவாகம் விடுத்துள்ள கோரிக்கை!
-மூதூர் நிருபர்-
திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையினால் மீள ஆரம்பிக்கப்படவிருக்கும் மன விருத்தி பாடசாலைலைக்கு மாணவர்களையும், ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புகின்றவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக திருக்கோணேஸ்வர ஆலய பணிமனையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
குறிப்பாக 6 தொடக்கம் 12 வரையான வயதுடைய பிள்ளைகளே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் தமது பிள்ளைகளை இணைத்துக் கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளின் சுயவிபரம் அடங்கிய விண்ணப்பங்களை விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் அவர்களுக்கு கற்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.