திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டது!

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் மாணவிகளின் பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனடிப்படையில், அவர்களுடைய பெறுபேறுகள் கல்வி அமைச்சினால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்