திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

-கிண்ணியா நிருபர்-

திருகோணாமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது

குறித்த வீதியில் உள்ள பாரிய வளைவிற்கு முன், திருமலையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், எதிரே கிண்ணியா பகுதியிலிருந்து வந்த பார ஊர்தியும் நேருக்கு நேர் மோதியதில், முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க