திருகோணமலை நகர வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பு!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நகர் பிரதான வீதியில் நடுவீதியில் மாடுகள் நிற்பதால் போக்குவரத்து தடைப்படுவதுடன் விபத்து சம்பவங்களும் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நகர் பகுதியில் வீடுகளில் சேரும் குப்பை கழிவுகளை வீட்டின் முன் நுழைவாயிலின் வெளிப்பகுதியில் வைப்பதால் அதனை மாடுகள் அங்கும் இங்கும் இழுத்து வீதியை நாசமாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த மாடுகளை கட்டுப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்