
திருகோணமலையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள கோப் நிறுவனத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சித்திரை புத்தாண்டு நிகழ்வானது நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது கோப் நிறுவனத்தின் பணிப்பாளர் செ.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கோப் நிறுவனத்தின் செயலாளர் ச.லட்சுமணன், உறுப்பினர் த.ரொகான், பட்டினமும் சூழலும் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.கௌரிசாந், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.புரபானந்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்