திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ் நிலப்பகுதிகள்!
பெய்து வரும் கன மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மூதூர் கிழக்கு, வெருகல், கிண்ணியா, தம்பலகாமம், புல்மோட்டை, குச்சவெளி உட்பட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மற்றும் உப்புவெளி எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரசபையின் செயலாளர் தே. ஜெயவிஷ்ணு திருகோணமலை நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
மேலும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை கிண்ணியாவில் முன்னெடுத்து வருகின்றனர்.