-மூதூர் நிருபர்-
திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானத்தை மீனவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடித்துள்ளனர்.
கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்களால் இவ் சிறிய ரக விமானம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த விமானம் கரைக்கு கொண்டு வரப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்