திருகோணமலையில் ஓகம் கலைப்பள்ளியில் யோகாசன பயிற்சி

-கிண்ணியா நிருபர்-

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஓகம் கலைப் பள்ளியினால் உடல், உள ரீதியாக ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியுழுப்புதல் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை யோகாசன பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் 100 ற்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

அத்துடன் ஓகம் கலைப்பள்ளி மாணவர்களும், திருகோணமலை நகரசபை ஊழியர்களும் இணைந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்விலும் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியில் அனைவருக்கும் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்