திரிபோசா வழங்கப்படாமையினால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களுக்கும் அதிகமான 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இந்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்