தாழங்குடா கடற்கரை வீதி புரைமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இணக்கம்

மண்முனை பற்று தாழங்குடா வேடர்குடியிருப்பு 1 கிலோமீற்றர் நீளமான கடற்கரை வீதி புரைமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க குறித்த கடற்கரை வீதி புரைமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

நீண்ட காலமாக சேதமடைந்த வீதியை புரைமைத்து தருமாறு தாழங்குடா பொது அமைப்பு தமிழ் உணர்வாளர் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் அதன்படி குறித்த வேண்டுகோள் பூர்த்தி செய்யப்படவுள்ளதபகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்