தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி

-யாழ் நிருபர்-

இன்று சனிக்கிழமை, யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலட்டி சந்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.