தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்
-பதுளை நிருபர்-
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அளுத்வெல ஆமதுரு கந்த காட்டில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆராவேகம தனமல்வில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி தனது மகனை காணவில்லை என உயிரிழந்த நபரின் தாயார் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார் .
முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இறுதியாக உஸ்வெல்ல பலஹருவ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவருடன் அழுத்வெல ஆமதுருகந்த காட்டிற்கு கஞ்சா வளர்ப்பதற்காக சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது ஆமதுருகந்த காட்டுப்பகுதியில் குறித்த நபரின் தலையை துண்டித்து புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை பெண்ணெருவருடன் இருந்த தகாத உறவே கொலைக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸாரும் கொஸ்லந்தை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.