‘தலைவர் 170’ இல் இணையும் மிகப்பெரிய கூட்டணி

பிரபல இந்திய நடிகர்களான அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் அமிதாப் பச்சன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170′ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!’ என நடிகர் ரஜினிகாந்த் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘தலைவர் 170’ ரஜினிகாந்தின் 170வது படமாகும், மேலும் இது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறு இணைவுகளில் ஒன்றாகும்.

இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்