
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு
-மூதூர் நிருபர்-
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு நிகழ்வு திருகோணமலை சேருவில சிங்கள அறநெறிப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
சிவில் அமையம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்களின் பங்குபற்றலுடன் இவ் கலாச்சார பகிர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சேருவில ரஜ மஹா விகாரைக்குச் சென்ற இளைஞர், யுவதிகள் பௌத்த வழிபாட்டுத் தளத்தையும் அங்குள்ள முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர். அத்தோடு பௌத்த தேரர்களோடு சமூக நல்லிணக்க கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பின்னர் பெருநாள் தின பாரம்பரிய உணவுகள் பரிமாற்றம், பால் பொங்குதல், மேளம் அடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்