தமிழ்ப் பெண்னை மணந்தார் மக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்த மக்ஸ்வெல் அண்மையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

திருமணப் படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் மக்ஸ்வெல் – வினி ராமன் இருவருக்கும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

தமிழ்த் திருமணங்களில் உள்ள மூன்று முறை மாலை மாற்றுதல் சடங்கில் மக்ஸ்வெல்லும் வினி ராமனும் கலந்துகொண்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஐ. பி. எல். தொடரில் மக்ஸ்வெல்லை 11 கோடி இந்திய ரூபாய்க்கு பெங்களுர் அணி தக்கவைத்திருந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் அணியுடன் இணையவுள்ளார்.