தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்த வந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.