தபால் முத்திரை சேகரிப்பவர்களுக்கான அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் தபால் தலை கண்காட்சிப் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதுடன், 05 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்கு பற்றலாம்.
இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களுக்கு 01123 26163 என்ற தொலைபேசி எண்ணிலும், stampex2024@gmail.com என்ற ஈமெயில் முகவரியிலும், www.slpost.gov.lk மற்றும் www.stamps.gov.lk என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ள முடியும்.
அத்தோடு, www. facebook.com/PhilatelicBureauSriLanka என்ற முகநூல் பக்கத்தினூடாகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்