தன்னை போல பந்து வீசும் சிறுவன் ஒருவன் குறித்து தகவல்களை வழங்குமாறு லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லசித்மலிங்க தனது முகநூலில் பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சிறுவன் யார் என்பதை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளவன் போல தோன்றும் இந்த சிறுவனை கண்டுபிடிக்க வேண்டும், எவருக்காவது இந்த சிறுவன் குறித்து தெரிந்திருந்தால் தயவு செய்து என்னை தொடர்புகொள்ளுங்கள், என மலிங்க தெரிவித்துள்ளார்.