தன்சானியாவில் புதிய வைரஸ் : 8 பேர் உயிரிழப்பு!

தன்சானியாவில் மார்பர்க் வைரஸ் Marburg virus (MARV) என சந்தேகிக்கப்படும் வைரஸ் பரவல் காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தன்சானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இரண்டு மாவட்டங்களிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், வைரஸ் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கமைய எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வைரஸ் பரவலை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு தொற்றாளர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM