தனியார் விடுதியில் தங்கியிருந்தவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்-

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Shanakiya Rasaputhiran

குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வருகின்றனர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் இருந்து வந்து சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார்.

இருப்பினும் கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் இன்று மாலை குறித்த விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார்.

அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad