தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி: சடலமாக வீடு திரும்பினார்
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கொக்குவில் கிழக்கை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் வகுப்பொன்றுக்குக் குறித்த மாணவி சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் – போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.