
தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தம்
அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாவவே அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை அவிசாவளை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் அரச பஸ்களின் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.