தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளம் 40 வீதத்தால் அதிகரித்து 21,000 ரூபாயாக உயர்ந்துள்ளது .

தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, அறக்கட்டளை நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வரையறையும் உயர்த்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இன்று தெரிவித்துள்ளது.