தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

-கிண்ணியா நிறுபர்-

திருகோணமலை பாலையூற்றில் இயங்கி வரும் எஸ்/அந்தோனிஸ் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.

கல்வி நிலையத்தின் பிரதானி ப. சுதன் தலைமையில் நோன்பு திறக்கும் இந் நிகழ்வில் திருகோணமலை சாகிராக் கல்லூரியின் முதல்வர் எம்.எம்.எம்.முகைஸ் உட்பட ஆசிரியர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மௌலவி, மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏனைய மதத்தவர்களும் இதில் கலந்து கொண்டு சகவாழ்வை கட்டியெழுப்பக்கூடியதும் புரிந்துணர்வுடன் வாழக் கூடியதுமான மனப்பாங்கை இதன் ஊடாக வளர்த்துக் கொள்ள இந்த இப்தார் நிகழ்வு வழிகாட்டுகிறது.

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

தனியார் கல்வி நிலையத்தில் இப்தார் நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்