தனது வெற்றியின் பின் அமெரிக்கா விடுதலை பெற்ற நாடாக மாறும்: ட்ரம்ப்

அமெரிக்க மக்கள் தமது அடுத்த ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கமலா ஹரிசும் டொனால்ட் ட்ரம்பும் சுவிங் மாநிலத்தில் தமது பிரசார நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கத் தேர்தலில் அரிசோனா, புளோரிடா, ஜோர்ஜியா மற்றும் அயோவா போன்ற மாநிலங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்த மாவட்டங்கள் போர்க்களமாகக் கருதப்படும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்றன.

நாடளாவிய ரீதியாக இதுவரை 7 கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். இருப்பினும் வாக்களிப்பது குறித்து முடிவு செய்யாத வாக்குகளைப் பெறும் நோக்கில் வேட்பாளர்கள் இருவரும் கவனம் செலுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வட கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப் 5ஆம் திகதியின் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட நாடாகக் கருதப்படும் அமெரிக்கா, விடுதலை பெற்ற நாடாக மாறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்