தந்தைக்கு பச்சை குத்த வந்த நபர்: 14 வயது மகளை அழைத்து சென்றமை தொடர்பில் விசாரணை

பேருவளை பகுதியில் 14 வயது சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்ற பச்சை குத்தும் நபர் தொடர்பில் சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேருவளை பண்டாரவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியியே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் கடந்த 2ம் திகதி காணாமல்போன இந்த சிறுமி உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தன்னை மொரட்டுவையிலிருந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் உடலில் பச்சை குத்துவதற்காக வந்த பச்சை குத்தும் நபர் சிறுமியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மொரட்டுவைஇ உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தும் நபரின் வீட்டில் தான் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்