தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் பலி

இந்தியாவில் சென்னை தண்டையார்பேட்டையில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருவொற்றி ஊரைச் சேர்ந்த கவின் சித்தார்த் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது நண்பனின் பிறந்தநாளை கொண்டாடியபோது சரக்கு ரயில் மேல் ஏறி நின்று செல்பி எடுத்தவேளை உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்