தடையை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகக் குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க