தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவிசாரணை

தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை  மருத்துவ விநியோக பிரிவுக்கு சென்றிருந்தனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்கவின் அலுவலகத்துக்கு சென்று அவர்கள் ஆவணங்களை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.