தடம்புரண்ட வேன்: 10 பேர் படுகாயம்

இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம், தண்டலம் பகுதியில் வேன் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 10க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தண்டலம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையில் வேனின் டயர் வெடித்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்