தஞ்சாவூர் அம்மன் கோயிலில் அதிசயம்

இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் இடம்பெற்ற அதிசயம் இணையத்தில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் பக்தர் ஒருவர் கொண்டு வந்த தேங்காயில் 4 சில் இருந்தது தெரியவந்தது.. வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து நின்றதுடன் இந்த தேங்காய் இப்படி ஏன் இருக்கிறது என்ற கேள்வியும் பக்தர்கள் மனதில் எழுந்தன.

மேலும் இந்த தேங்காய் வீடியோ இணையத்தில் பரபரப்பாக வெளியாகி, பக்தர்களுக்கு பரவசத்தை தந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.