தங்க நகைகளைக் கடத்திய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை – வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பயணி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரிடமிருந்து 4 தங்கச் சங்கிலிகள் மற்றும் 2 வளையல்கள் உள்ளிட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்