Sri Lanka Tamil News Site

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை உடைப்பு

- Advertisement -

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை இன்று செவ்வாய்க்கிழமை சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார்.

கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையை உடைத்துள்ளனர்.

 

- Advertisement -