டொல்பின்கள்
பாடும் டொல்பின்கள்
🦈டொல்பின்கள் புத்திசாலித்தனம் நிறைந்தவை.
🦈மனிதர்களுடன் இணக்கம் காட்டுபவை.
🦈டெல்பின்கள் பல மைல் தொலைவில் இருந்தும் கூட தங்களுக்குள் வித்தியாசமான ஒலிகளின் மூலமாக தகவல் பரிமாற்றிக் கொள்ளும்.
ஒரு டொல்பின் தனிமையில் இருக்கும் போது பாடுவதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்
🦈தன் குழுவில் இருந்து பிரிந்த ஒரு டொல்பின் டென்மார்க் கடற்கரையை வந்து அடைந்தது . அது மக்களை பார்த்ததும் சந்தோஷத்தில் குதித்து விளையாடியது பின் பெரிய சத்தமாக ஒலி எழுப்பியது. இதனால் டொல்பினின் வித்தியாசமான ஒலிகளால் ஈர்க்கப்பட்ட விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்தனர்.
🦈இதனை ஆய்வு செய்கையில் இதன் குரலானது 10இ833 வித்தியாசமான ஒலிகளை எழுப்புவது தெரிய வந்துள்ளது.
🦈இவ்வளவு வேறுபட்ட ஒலிகளை உருவாக்குவதற்கான காரணத்தினை இதுதான் என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே விஞ்ஞானிகள் சில அனுமானங்களை செய்துள்ளனர்.
🦈இந்த டொல்பின் தன் குழுவில் இருந்து 500 மைல் தூரம் பிரிந்து வந்து விட்டதால் தன் குழுவிடம் சேர எண்ணி ஒலி சமிஞ்ஞையை அனுப்பலாம் அப்படி இல்லை ஏன் தன் தனிமையை போக்கிக் கொள்ள தன் குழுவினரின் பெயரை பாட்டாக பாடிக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்