டொலரின் கையிருப்பு வீழ்ச்சி

நாட்டின் உத்தியோகபூர்வ டொலரின் கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதத்தில் டொலரின் உத்தியோகபூர்வ கையிருப்பானது 5.65 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. எனினும் ஜூலை மாதத்தில் டொலரின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5.64 பில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்