டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தினார் : திருநங்கைகளுக்கான முதல் வைத்தியசாலைக்கு பூட்டு!

இந்தியாவின் திருநங்கைகளுக்கான முதல் வைத்தியசாலையை யு.எஸ்.எய்ட் நிறுவனம் மூடியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தியதை அடுத்து,இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான வைத்தியசாலை மூன்று நகரங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.

இந்தியாவின் தானே,புனே,ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மருத்துவ சேவையை முன்னெடுத்து வந்த இந்த வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

யு.எஸ்.எய்ட் நிதிகள் நிறுத்தப்பட்டிருப்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு திட்டங்களையும் குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையும் பாதித்துள்ளன.

இந்த வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளமை திருநங்கைகளின் சுகாதார தேவைகளைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க