டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரு குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2020ஆம் ஆண்டில் தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரச சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்