டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க மக்கள் செயற்பட வேண்டுமென, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார வைத்திய நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.
மேலும், உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் நிலையங்களுக்கு அருகில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, பாடசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.