டெங்குக் காய்ச்சல் குணமாக உணவு

டெங்குக் காய்ச்சல் குணமாக உணவு

டெங்குக் காய்ச்சல் குணமாக உணவு

⬛டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் வெப்பமண்டல நுளம்புளால் பரவும் நோயாகும். ஏடிஸ் நுளம்பால் பரவும் டெங்கு காய்ச்சல், பல உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

⬛அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூட்டு மற்றும் தசை வலி, தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு டெங்கு இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

⬛மேலும் இந்த வகை காய்ச்சல் நீண்ட நாள் நீடிக்கும். மேலும் இது உங்களுக்கு ஒரு பலவீனமான அனுபவத்தைத் தருவதால், நீங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, மனதளவிலும் பெரும் தாக்கத்தை அனுபவிப்பீர்கள். இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பதற்கான உணவு முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

🎈வெந்தயம் ஒரு மயக்க மருந்தாக செயல்படுகிறது மற்றும் தூக்கத்தை தூண்டுகிறது, இதனால் வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, அதிக காய்ச்சலை சமன் செய்யவும், டெங்கு போன்ற காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் வெந்தயம் பயன்படுகிறது.

🎈மாதுளை உடல்நலம் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மாதுளையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே டெங்கு காய்ச்சலை எதிர்த்து போராடும் சக்தியை மாதுளை உடலுக்கு அளிக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட மாதுளை ஒரு முக்கிய மூலப்பொருளாகும், ஏனெனில் இது அத்தியாவசிய இரத்த தட்டுகளை பராமரிக்க உதவுகிறது.

🎈கீரையில் இரும்புச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரும்புச் சத்து காரணமாக இரத்தத் தட்டுக்களை அதிகரிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

🎈பப்பாளி இலைகளில் பப்பைன் நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் வீக்கம், அஜீரணம் மற்றும் செரிமான கோளாறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன. பச்சை பப்பாளி இலைச்சாறு 30 மில்லி சாப்பிட்டு வர இரத்த தட்டுக்கள் அதிகரிக்கும்.

🎈டெங்கு பொதுவாக உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. இளநீர் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

🎈ப்ரோக்கோலியில் வைட்டமின் கே நிறைந்துள்ளது, இது இரத்த தட்டுக்களை மீண்டும் உருவாக்குகிறது. டெங்கு நோயாளிகளின் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது கண்டிப்பாக ப்ரோக்கோலியை உட்கொள்ள வேண்டும். மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.

🎈கிவி பழம் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் கலவையாகும். இந்த சத்துக்கள் உடலில் உள்ள நீர்ப்போக்கு மற்றும் இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. கிவி பழத்தில் உள்ள தாமிரம் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கி டெங்கு நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

🎈மஞ்சள் கிருமி நாசினியாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்பட்டு டெங்கு நோயிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் பாலுடன் மஞ்சளை சேர்ப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஏனெனில் பாலில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது.

🎈ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி டெங்கு காய்ச்சலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டெங்குக் காய்ச்சல் குணமாக உணவு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்