டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு
நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர் மட்டத்திற்குக் கொண்டு வர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் அடுத்த 5 வருடங்களுக்குள் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்