ஜே.வி.பி. யின் அதிரடி அறிவிப்பு

பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  எதிராக பல பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையியே  ஜே.வி.பி., மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஏக நேரத்தில் போராட்டத்தை நடத்துமாறு, சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க