
ஜெய்பூர் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம்
கோலிவுட்டில் இது திருமண சீசன், ஹரிஷ் கல்யாணை தொடர்ந்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார் ஹன்சிகா மோத்வானி. டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் தனது காதலர் சோஹைல் கதுரியாவை அவர் கரம் பிடிக்கவிருக்கிறார்.
முதலில் நண்பர்களான ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் பின்னர் பிஸினெஸ் பார்ட்னர்களாகினர். இருவரும் இணைந்து 2020-ஆம் ஆண்டு முதல் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். சோஹைல் ஒரு தொழிலதிபர். அவர் வெட்டிங் பிளானிங் மற்றும் கிஃப்ட்டிங் சொல்யூஷன் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.
திருமண விழாக்கள் டிசம்பர் 2 ஆம் தேதி இரவு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்கள் டிசம்பர் 3-ம் தேதி நடக்கும். ஹன்சிகாவின் குடும்பத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா குடும்பத்தினருக்கு அந்த இடம் பிடித்திருந்தது. எனவே அவர்கள் ஹன்சிகாவின் திருமணத்தையும் அங்கு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.