ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் பலி
குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி – ஹெட்டிபொல வீதியில் கம்புரபொல பாலத்தில் புஜ்கமுவ ஓடையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குருநாகலில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.