ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

பிபில – மொனராகலை வீதியில் கனுல்வெல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குழந்தையொன்றும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்