ஜப்பானில் தொடர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை -வீடியோ இணைப்பு –

ஜப்பானின் தெற்குப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, தெற்கில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளின் கரையோரப் பகுதிகளுக்கு உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே (NHK) இந்த எச்சரிக்கைகள் ககோஷிமா மற்றும் எஹிம் மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது, மியாசாகி மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுனாமியின் உயரம் ஒரு மீட்டரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் இரயில் முன்னெச்சரிக்கையாக அதன் ரயில் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பின்னர் 7.1 அளவிலும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்