ஜப்பானியர்களை குறிவைத்து இலங்கையில் நிதி மோசடி!
கொழும்பில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று தம்மை அடையாளப்படுத்தி நிறுவனமொன்று ஜப்பானியர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த நிதி மோசடி தொடர்பில் இலங்கையில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர் வழங்கிய தகவல்களை சுட்டிக்காட்டி ஜப்பானிய செய்தி நிறுவனமான Kyodo News செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நிறுவனம் வேலைக்கு ஆட்களை சேர்ப்பதாகவும் 250,000 இலங்கை ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் விளம்பளம் செய்துள்ளது.
இலங்கையில் வசிக்கும் ஜப்பானியர்களை குறிவைத்து இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வேலைவாய்ப்பிற்காக குறித்த நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் ஜப்பானியர் ஒருவர் 192,000 இலங்கை ரூபாவை குறித்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் வைப்பிலிட்டதாகவும் அதன் பின்னர் அந்த வேலை வாய்ப்பு தகவல் போலியானது என தெரிய வந்ததாகவும் ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Kyodo News வெளியிட்டுள்ள செய்தி Sri Lanka-based investment scammers target Japanese: ex-local worker
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்